Wednesday, December 8, 2010

அகவை அய்ம்பத்தாறு கண்ட அற்புத தலைவன்

0 comments
அகவை அய்ம்பத்தாறு கண்ட அற்புத தலைவன் - நீஉலக தமிழர்களின் உன்னத தலைவன் - நீதமிழனின் அடிமைத் தடைகளை தகர்த்தெறிந்துதனி நாடு கண்ட வீரத் தலைவன் நீபுறநானூற்றின் போர்படையாம் புலிப் படையை - நீஅமைத்து தமிழீழம் அமைத்து வெற்றிக் கண்டாய்தமிழீழத்தில் அஞ்சா நெஞ்சமும் வீரமும் தீரமும் கொண்டஅருந்தமிழர் கூட்டம் உன் படையில் அதைபுறநானூற்றின் தமிழர் வீரர் தன்னைஉலகிற்கு உணர்த்திய உன்னத எம் தலைவாவெஞசமர் புரிந்து தமிழர் பகைவரை வீழ்த்தினாய்சிங்கமென்ற சிங்களவனை சிறுநரியாய் ஆக்கினாய்கொரில்லா போர்படை வியுகம் அமைத்துஆணவ சிங்களவனை...

Monday, November 29, 2010

மாவீரர் உலகையே வியக்கவைத்த எங்கள் உன்னத வீரர்கள்…..

0 comments
உலகையே வியக்கவைத்தஎங்கள் உன்னத வீரர்கள்…..சரித்திரங்கள் பலபடைத்தசாதனைச் சிகரங்கள்…..மலைகளைப் பிழந்துதமிழன் வீரம் சொன்னவர்கள்….உலகையே எதிர்த்து நின்றுஎங்கள் உரிமையைக் கேட்டவர்கள்…உலகச் சதிகளினால்மண்ணுக்கு இரத்தம் தந்த வேங்கைகள்….இறந்தும் நம் மானம் காக்கும்தமிழினத்தின் வித்துக்கள்….ஒன்றல்ல இரண்டல்லமுப்பத்தையாயிரத்துக்கு மேல்தங்கள் மூச்சுக்களைத் திறந்துஎங்களை மூச்சடைக்க வைத்தவர்கள்….வியூகம் உடைக்கவாவென்று அழைக்கு முன்னே..வரிசையில் முதல் சென்றவரலாற்று நாயகர்கள்….சுய நலம் நீங்கிபொது நலம் தாங்கி…விடுதலையே...

Friday, November 26, 2010

வாய்மைத் திருமகன்

0 comments
தேசியத் தலைவா தேசியத் தலைவா!தேசம் எழுதிய தீந்தமிழா!-கைவீசிய வீச்சினில் வேங்கையின் மூச்சில்விளைத்தனை ஈழம் பெருந்தலைவா! - தேசியத்ஊர்க லடங்கிலும் உலக மடங்கிலும்ஏர்முனைய யாக்கிய ஈழமகன்-ஈழம்வாழும் உலகினை வார்ப்புகள் ஆக்கியவரலா றெழுதிய வண்ணமகன்! - தேசியத்ஆகுதி யானவர் ஏகிக் களம்புகவேதம் உரைத்திட்ட வித்துவனே-தமிழர்சாகும் நிலையிலும் ஈழம் எழுதிடும்சந்ததி கொடுத்தாய் தத்துவனே! -தேசியத்காடு எரிந்தது ககனம் எரிந்ததுநாடு மறந்திலை நாயகனே-பெற்றவீடு உலவிய வெற்றித் திருமகள்வீழ்ந்தும் மறந்திலை ஈழமதே! -தேசியத்நீயொரு...

தமிழ் அன்னை தலை நிமிர்த்த வந்த நாயகனே

0 comments
ஆழ் கடல் சீறி ஓங்கும் வாவிதனும் சீர்திலங்கும்சீர் மிகு ஈழத்தின் வல்வை பெற்றெடுத்த நேர்மிகு தலைவன் தோன்றினான்தமிழ் அன்னை தலை நிமிர்த்த வந்த நாயகனேதமிழைக்காத்து வரலாறு எழுதிய தாயகனேபட்டாம் பூச்சி பிடிக்கும் பதினாறுகளில்பகை மிரட்டி பகை விரட்ட உன்னால் மட்டும் முடிந்ததன்றோஎம் இனத் தோன்றலே என்றும் நீ மாதீரனேகார்த்திகை மைந்தனே ஈழத்தின் காரிருள் நீக்க வந்த கதிரொளியேதாளாது சிறிதும் சாயாது வீரப் புலியாய் துணிந்தே விரைந்தாய்பெரும் மாயக் கொடியர் கொடும் வதைதனை உடைத்தாய்செந்தமிழ்த்தாய் தேச...

56 வது அகவை காணும் அண்ணா, நீங்கள் ஆயிரம் கோடி காலம் வாழ்க

0 comments
56 வது அகவை காணும் அண்ணா, நீங்கள் ஆயிரம் கோடி காலம் வாழ்க,நீங்கள் பிறந்ததனால் உயிர் பெற்றது தமிழினம், உயர்வு பெற்றது தமிழினம்,உங்கள் பிறந்தநாளே தமிழரின் தை திருநாள் அண்ணா. நீங்கள் வாழ்க பல்லாண்டுஇருண்டு கிடந்த தமிழினத்துக்கு வெளிச்சம் தந்தவர் நீங்கள் அண்ணா, கண்ணெதிரே தெய்வங்களை கண்டதில்லை தமிழினம், ஆனால் முதன் முதல் தோன்றிய தெய்வம் அண்ணா நீங்கள், பல அரசர்களையும் தலைவர்களையும் கண்டது தமிழினம், ஆனால் முதன் முதலாக முப்படையையும் கண்ட தலைவர் அல்லவா நீங்கள் அண்ணா.தாயுடன் அதிக காலம் இருந்தவர் இல்லை அண்ணா...

Tuesday, November 23, 2010

தமிழ்ச் சூரியேனே நீ வாழி! வாழி!!

0 comments
சேற்றுநிலச் செழுங்கமலப் பூவே வாழ்விற்செந்தமிழே உயிராமென் றறைந்த கோவேநாற்றிசையும் எழில்சிந்தும் பொதிகைக் காவின்நறும்வாசச் சந்தனமே! நிலம்தீ நீர்வான்காற்றென்றும் ஐம்பூத வடிவம் தாங்கிக்காலப்போர் புரிந்ததமிழ் மறவர் தேவே!மாற்றில்லாப் பசும்பொன்னாய் மிளிரும் ஈழமக்கள்தம் மன்னவனே வாழி! வாழி!!பூவெல்லாம் நின்மாண்பு சொல்லுமா போல்புதுவிதழ்கள் மிகவிரித்து எழிலாய் நிற்கும்!நாவெல்லாம் நின்னாற்றல் பேசிப் பேசிநயன்சொல்லும்! நம்கவிஞர்; யாக்கும் இன்பப்பாவெல்லாம் பைந்தமிழர் தலைவ நின்னைபல்லூழி வாழ்கவெனும் தமிழீழத்துக்காவெல்லாம்...

Monday, November 22, 2010

கை மலர்கொண்டு கார்த்திகை மலர்களை பூசிக்க வாருங்கள்

1 comments
காத்திருந்து காத்திருந்து கார்த்திகை வந்ததும்கார்த்திகைமலராய் பூத்திருந்து எமை பார்த்திருக்கும்-எம்கார்த்திகை மலர்களை கைதொழ வாருங்கள் -உங்கள்கைமலர் கொண்டு வையகம் எங்கிலும் வாழும்தமிழரேகார்த்திகைமலர்களை பூசிக்க வாருங்கள்ஈழம்மலரும் வேளையிலே - தம்இதயதாகம் தீர்ந்ததெனஈழத்தாயினை வாழ்த்திடவேகல்லறையில் கண்விழித்துக் காத்திருக்கும்எம்காவல் தெய்வங்களை போற்றிடவே வாருங்கள்போற்றியே போற்றியே தீபம் ஏற்றிட வாருங்கள்.ஏற்றிவைக்கும் தீபத்தின் ஒளியாய் நின்றுஎம்மினத்தின் இருளகற்றி ஓளியேற்ற வேண்டிபோற்றிடவே வாருங்கள்...

Sunday, October 3, 2010

ஈழகாவியம் - 09

0 comments
புலத்துக் காண்டம்.அத்தியாயம்:11 நிகழ்காலம்.இந்தப் பொழுதின் மாவீரர் நாள்கார்த்திகை மைந்தர் வணக்கம்!(அறுசீர் விருத்தம்)கார்த்திகைக் காலம் இந்நாள்!கதையொடும் சிதைகள் நின்றுகோர்த்திடும் மைந்தர் பேச்சுக்கேட்டிடும் நாட்கள் இந்நாள்!வார்ப்பொடும் பாச நெஞ்சம்வைத்தவர் உயிரைத் தூவிச்சேர்த்தவர் ஒளிரும் தேசச்சிற்பிகள் உலவும் நாட்கள்!கைகளால் ஏத்தி நின்றோம்!கனிமொழிப் பாடல் வைத்தோம்!மைகரை அழியா மங்கைமண்கரும் புலியாய்ப் போனசெய்களம் சிலிர்க்க நின்றோம்!செந்தமிழ் அன்னைக் காகப்பெய்தனர் ஆவி என்னும்பெருங்கதை பாடு கின்றோம்!சிந்தனை...

ஈழகாவியம் - 08

0 comments
புலத்துக் காண்டம்.அத்தியாயம்:10 நிகழ்காலம்.தமிழ்நாடு(அகவல்)முள்ளிவாய்க்கால் நந்திகடல் முழுவதுமாய் எரிந்துவிழசுள்ளிகளும் தீப்பற்றிச் சுடுகாடாய் மாறியதே!ஒன்றாயும் பத்துமென உயிர்கருகிப் போகையிலும்சென்றுசிங்க ளத்திற்குச் சேதிசொல்லி வந்துவிட்டுஇந்தியமும் மூக்காவும் இருந்தரைந்த நாடகத்தில்சந்துகளும் எரிந்துவிழச் சாக்காடாய் மாறியதே!பாக்குநீர்ச் சந்தியிலும் பலியிட்டுச் சிங்களவன்மூக்குமுட்ட வந்தாடி முடிச்சிறுக்கிப் போகின்றான்!ஐந்துநூறு செந்தமிழர் ஆகுபலி யானபின்னும்இந்தியர்கள் அவர்களென்று இத்தாலி யாளுணராள்!வருநாளெல்...

ஈழகாவியம் - 07

0 comments
அத்தியாயம்:09 நிகழ்காலம்.நோர்டிக் நாடுகளும் ஐரோப்பியமும்!(அகவல்)கடலும் வானும் கரையும் நிலமும்உடலை வருத்தி உள்ளமும் நொந்தும்ஆயிர மாயிரம் இனச்சிற கிழந்தபின்சேயொடும் தந்தையும் சேர்ந்த அன்னையும்இருபது நாடுகள் ஏறி இறங்கிவருவதை ஏற்று வந்து குவிந்தோம்!நோர்வே, டென்மார்க், சேர்மனி, இற்றலிகோர்வை யாகவே கொண்டு பிரான்சும்நேட்டோ என்றும் இரச்சியம் சுவிசும்கேட்போ ரின்றிக் குதித்துமே விட்டோம்!தமிழீ ழத்திற் தந்த கல்வியும்அமிழ்தாய் எங்களை ஆக்கிய தாமே!ஒசுலோத் தலைமை எரிக்சொல் கெய்ம்மைவசமாய்த் தீர்வை வகுத்திட வென்றேபணித்தும்...

ஈழகாவியம் - 06

0 comments
புலத்துக் காண்டம்.அத்தியாயம்:08 நிகழ்காலம்.பிரித்தானியாவால் அழிந்த ஈழம்!(அகவல்)பிரித்தா னியர்கள் பிறழ்ந்த போதேநரிச்சிங் களத்தை நம்தமிழ் கண்டது!சுதந்திர நாடாய்ச் செப்பிய இலங்கைமதத்த நாடாய் மறுகணம் வந்தது!பரத்தையர் கொடுத்துப் படுக்க வைத்துக்கரத்தைக் கட்டிலில் கைப்பிடித் ததனால்ஆளுனர் சோல்பரி அசிங்கர் கையில்வாளைக் கொடுத்து வரலா றழித்தார்!சோல்பரிக் குழுவில் செப்பிய பொன்னரின்சால்புநீ தியையும் சரித்திடக் கெடுத்தார்!பின்னர் ஒருமுறை பித்தர் சோல்பரிமன்னன் சங்கிலி வாழ்ந்த பூமியாம்யாழ்ப்பா ணத்தில் யாத்திரை...

ஈழகாவியம் - 05

0 comments
அத்தியாயம்07:நிகழ்காலம் விடுதலையை மதித்த வெள்ளைநாடு!(எண்சீர் விருத்தம்)நல்லமனம் கொண்டோரை நாடு போற்றும்! நல்லாட்சி செய்வோரை மறைகள் போற்றும்!கொல்பவர்க்கு வாள்கொடுத்தாற் கொடுமை ஆகும்! கூற்றுவனைப் பின்தொடர்ந்தால் மனிதம் சாகும்!சொல்லுண்மை சரிபார்த்துத் தொடுதல் வேண்டும்! சுதந்திரத்தை எல்லோர்க்கும் பகிர்தல் வேண்டும்!வல்லோர்க்கும் தீமையிலா திருக்க வேண்டும்! வளர்நாடு தர்மத்தை வணங்க வேண்டும்!எல்லோர்க்கும் எல்லாமும் இயற்ற வேண்டும்! எவர்கையும் தூய்மைக்காய் உயர வேண்டும்!இல்லார்க்கும் இல்லாமை போக்க வேண்டும்!...

ஈழகாவியம் - 04

0 comments
அத்தியாயம் 06:நிகழ்காலம் கனடிய நாடும்; கனித்தமிழ் இனமும் (கும்மி)மானுட சாசனம் வைத்திருக் கும்நல்ல மாக்கன டாவினைப் பாடுமம் மா! வானிடும் குண்டில் மக்களெ ரிகையில் வாழக்க ரம்தந்த நாடுஅம் மா!ஈனத்த ரானஇ லங்கரின் ஆட்சியில்என்றும ழிந்ததும் எம்மின மே!கூனக்கி ழத்தின ரானமோ டர்களால்கொஞ்சுநி லம்எரிந் தாச்சுதம் மே!ஈழமண் பின்னொடு மிக்கன டாவிலேஇன்றுநாம் நான்குஇ லட்சமம் மா!ஆழம னம்தந்து ஆதரித் தாரிந்தஅன்புநி லத்தையே போற்றுமம் மா!கூழைத்தின் றானாலும்...

Sunday, September 5, 2010

ஈழகாவியம் - 03

0 comments
நிகழ்காலம்-04 சீனமும் கூனி நாடுகளும்.. எரிகின்ற வீட்டிலே பொறிவைத்துச் சீனத்தான் ஈழத்தில் காலை வைத்தான்!இந்திய நாட்டுக்கு இலக்கோடு நின்றாட இலங்காவிற் கோலை விட்டான்!வரிசையில் நாடெல்லாம் குகையாகி நிற்பவன் வசமாகச் செய்து விட்டான்!வடமிட்டு இடம்பார்த்துத் தடமோடு சுழிபோட்டு வழியெல்லாம் இறுக்கி விட்டான்!நெரிக்கின்ற வடிவத்தில் நேர்வட்ட மாலையாய் நெம்புகோல் இறுக்கி விட்டான்!நிசத்திலே சிங்கள நீசரின் நாட்டிலும் நிலக்குகை தோண்டி விட்டான்!பிரிகின்ற கணைகளைத் தில்லியின் பக்கமே புறப்பட வைத்து விட்டான்!பேயாக...

Thursday, September 2, 2010

பொய் [ சமாதான ] மானின் பின்னே போனது போதுமடா சாமி

0 comments
pdf பொய் [ சமாதான ] மானின் பின்னே போனது போதுமடா சாமி ...

Wednesday, September 1, 2010

ஈழகாவியம் - 02

0 comments
1-உதயப்படலம்நிகழ்காலம்-02ஈழத்தைச் சுற்றிலும்.. இந்நாள்(அறுசீர் விருத்தம்)இந்துமா கடலைச் சுற்றிஎத்தரின் கூடா ரங்கள்!கந்தகச் சுரங்கத் தோடுகயவராய்ப் பலநா டுகள்!செந்தமிழ் நிலத்துட் சிங்கச்சேனையர்க் காகக் கொட்டிவந்தவல் லரசார் எல்லாம்வன்னியை முடித்தே விட்டார்!தாங்கொணாக் கொடுமை யாலும்தமிழரை இனமாய்க் கொல்லும்தீங்குவார் ஆட்சி யாலும்தீமையே உமிழ்வா ராலும்ஓங்கிய அரக்கத் தாலும்உயிர்நிலம் பறித்த லாலும்வேங்கையர் ஆன மண்ணைவிசமிகள் எரித்தார் இந்நாள்!முப்பது ஆண்டு காலம்முடிவிலாப் போரி னாலேஅப்பிடச் சிங்க ராட்சிஅரக்கராய்...

Monday, August 30, 2010

புத்தபெருமானை முன்னிறுத்தி ஒரு யுத்தப்பிரகடனம்

0 comments
pdf புத்தபெருமானை முன்னிறுத்தி ஒரு யுத்தப்பிரகடனம் ...

ஈழகாவியம் - 01

0 comments
கடவுள் வணக்கம்(நேரிசை வெண்பா)விநாயகர் காப்பு அங்குசத்தான் ஐங்கரனான் ஆனைமுகத் தானென்றேஎங்கெவர்க்கும் முன்வணக்கம் ஏற்போனே-இங்கீழநேசர்க்காய் மண்ணின் நெடுஞ்சரிதம் தானெழுதும்தேசப்பா உன்காப்புத் தேன்!யேசு காப்புசிலுவையிலே பாடுகளைத் தோளிற் சுமந்தவலுவை எமக்கருள வல்லாய்-நிலுவையிலேவல்லரக்கம் தந்த வரலாற்றை நானெழுதநல்ல கவியருள்வாய் நா!அல்லா காப்புஅல்லாவே எல்லெவர்க்கும் ஆண்டருளே செய்திடுமோர்வல்லவனே என்றனுக்காய் வாராயோ-சொல்லகவிஈழவர லாற்று எழுசரிதம் நாளையிலும்ஆழமென வையகத்தை ஆக்கு!செந்தமிழ்க் காப்புசங்கம் இருந்துலவிச்...

Blog Archive