Popular Posts
Saturday, August 28, 2010
கதிர்க்கையன் ஈற்றெடுப்பு (பிரபாகரன் அந்தாதி) - 10
at
3:25 PM
Posted by
எல்லாளன்
0
comments
விரட்டிவரும் வான்படையை வீழ்த்த விரைந்துன்
முரட்டுப் படையர் முனைந்தார் –திரட்டி
அடித்ததில் ‘‘நாயக’’ வான்தளம் வீழும்
வெடித்(து)உலங்(கு) ஊர்திபல வெந்து! (91)
நாயக –கட்டுநாயக வான்படைத்தளம்
வெந்து தணிந்ததில் விம்மினர்; வீங்கினர்;
நொந்து நொடிந்தனர் நோக்கிலார்; –வந்து
அமைதி உடன்படிக்கை நார்வே அமைக்க
தமைநொந்து கொண்டனரே தாழ்ந்து! (92)
தாழப் பிறந்தோர் தரைமீதில் பல்லாண்டு
வாழப் பிறந்தயெமை வாட்டினார் –பாழும்
சிறுமதியர்க்(கு) இந்தச் சிறுசெயலை நீயே
முரசறைந்து சுட்டினாய் முன்பு! (93)
முன்னே அமைதி முரசினொலி ஓயும்முன்
பின்னே படைநடத்திப் பாய்ந்திடுவார் –என்னே
அமைதி குலைத்தாயென்(று) ஆங்கவரைக் கேட்க
உமையன்றி வேறிலரே ஓர்ந்து! (94)
ஓர்ந்து பிரித்தார்நம் ஒப்பில் படையணியை;
சேர்ந்தான் ‘அருளன்’அச் சீயருடன் –நேர்ந்த
பழியறியும் பண்பில்லான் பாழும் வழிசென்(று)
இழிந்தோர்க்(கு) உதவினனே இங்கு! (95)
அருளன் –கருணா; சீயர் –சிங்கத்திடமிருந்து பிறந்தவராகச் சொல்லிக்
கொள்கின்ற சிங்களர்.
இங்குன் படைப்பிரிவை ஏற்று நடத்தியவன்
அங்குளவு சொல்லி அடிவீழ்ந்தான் –எங்கும்
இவன்போல் இரண்டகனை இவ்வுலகம் காணா;
இவன்போல் இவனே எனும்! (96)
====
ஏற்றிப் பிடித்தார் இனப்பகையை; இந்தநிலை
மாற்றத் துடித்த மறவனுனைத் –தூற்றித்
தடைபோடும் மண்ணுலகம்; தாங்கியதை வென்று
நடைபோடும் நம்மியக்கம் நன்கு! (97)
நலிவு புரிந்தும், நமைத்தடை செய்தும்
களிக்கின்ற காடையர் காண -உலகம்
வியக்கும் விதத்தில் விரிநீர் நடுவில்
இயக்கம் வளர்த்தாய் இயன்று! (98)
இயல்வது செய்தெம் இனத்தவரைக் காக்க
முயல்வது போலும் மொழிவார் –முயல்வதெம்
மக்களை மாய்க்கும் வழியறிய வேயந்தக்
குக்கலைக் கொல்வதுன் கோள்! (99)
குக்கள் –நாய்கள்; கோள் –குறிக்கோள்.
கோரிக்கை வைத்தும் கொடுத்திடார்; எம்மக்கள்
வாரிக்கை கூப்பியும் வந்துதவார்; -சீறித்
தடைபோடும் ஆங்கு நுகர்பொருட்கே; மீறி
நடைபோடும் நம்மினம் நன்கு! (100)
--
அன்புடன்
அகரம்.அமுதா
Subscribe to:
Post Comments (Atom)
Labels
- ஈழகாவியம் (16)
- ஈழம் (43)
- உலைக்களம் (14)
- பிரபாகரன் அந்தாதி (18)
- மாவீரர் நாள் (2)
Blog Archive
-
▼
2010
(31)
-
▼
August
(15)
- புத்தபெருமானை முன்னிறுத்தி ஒரு யுத்தப்பிரகடனம்
- ஈழகாவியம் - 01
- கதிர்க்கையன் ஈற்றெடுப்பு (பிரபாகரன் அந்தாதி) - 01--10
- கதிர்க்கையன் ஈற்றெடுப்பு (பிரபாகரன் அந்தாதி) - 10
- கதிர்க்கையன் ஈற்றெடுப்பு (பிரபாகரன் அந்தாதி) - 09
- கதிர்க்கையன் ஈற்றெடுப்பு (பிரபாகரன் அந்தாதி) - 08
- கதிர்க்கையன் ஈற்றெடுப்பு (பிரபாகரன் அந்தாதி) - 07
- கதிர்க்கையன் ஈற்றெடுப்பு (பிரபாகரன் அந்தாதி) - 06
- கதிர்க்கையன் ஈற்றெடுப்பு (பிரபாகரன் அந்தாதி) - 05
- கதிர்க்கையன் ஈற்றெடுப்பு (பிரபாகரன் அந்தாதி) - 04
- கதிர்க்கையன் ஈற்றெடுப்பு (பிரபாகரன் அந்தாதி) - 03
- கதிர்க்கையன் ஈற்றெடுப்பு (பிரபாகரன் அந்தாதி) - 02
- கதிர்க்கையன் ஈற்றெடுப்பு ! (பிரபாகரன் அந்தாதி)-01
- மேஜர் கமல் (கவிதை)
- Puthuvai Ratnathurai's Poem Collection “ Ulaikalam”
-
▼
August
(15)
0 comments:
Post a Comment