
நிகழ்காலம்-04 சீனமும் கூனி நாடுகளும்.. எரிகின்ற வீட்டிலே பொறிவைத்துச் சீனத்தான் ஈழத்தில் காலை வைத்தான்!இந்திய நாட்டுக்கு இலக்கோடு நின்றாட இலங்காவிற் கோலை விட்டான்!வரிசையில் நாடெல்லாம் குகையாகி நிற்பவன் வசமாகச் செய்து விட்டான்!வடமிட்டு இடம்பார்த்துத் தடமோடு சுழிபோட்டு வழியெல்லாம் இறுக்கி விட்டான்!நெரிக்கின்ற வடிவத்தில் நேர்வட்ட மாலையாய் நெம்புகோல் இறுக்கி விட்டான்!நிசத்திலே சிங்கள நீசரின் நாட்டிலும் நிலக்குகை தோண்டி விட்டான்!பிரிகின்ற கணைகளைத் தில்லியின் பக்கமே புறப்பட வைத்து விட்டான்!பேயாக...